மீண்டும் ஏற்றத்தை நோக்கி பங்குச் சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
பங்குச் சந்தை நேற்று சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தை நோக்கி சென்றுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று சிறிய அளவு பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் உயர்ந்து 61,250 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 18,115 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட காலத்திற்கு பங்குச்சந்தை லாபத்தை கொடுக்கும் ஒரு அம்சமாக தான் இருக்கும் என்றும் சரியான பங்குச்சந்தை நிபுணர்களுடன் ஆலோசனை செய்து முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva