ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:58 IST)

தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ்.... 60 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

share
இந்திய பங்குச் சந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் சரிவில் இருந்ததால் ஆயிரக்கணக்கான கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தை மீண்டு வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து மீண்டும் 60 ஆயிரத்தை சென்செக்ஸ் எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 65 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 890 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டு வருவதை அடுத்து இனி பங்குச் சந்தை ஏற்றம் காணும் என்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது