வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:30 IST)

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Sensex
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சற்றுமுன் பங்கு சந்தை தொடங்கிய நிலையில் 585 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து தற்போது 59420 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக முடிவில் 60 ஆயிரத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 160 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 690 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.