வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:48 IST)

தொடர்ந்து 4 வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய நிப்டி நிலவரம்..!

share
கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்தது என்ற நிலையில் இன்று நான்காவது நாளாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் லாபம் பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து 81,846 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 25,067 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தொடர்ச்சியாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் புதிதாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ், கோல்ட் பீஸ், நாட்கோ பார்மா, சவுத் பேங்க், டாடா ஸ்டீல், எஸ் வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Siva