Daily Horoscope
✕

ஒரே நாளில் 1300 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 7 நவம்பர் 2024 (09:50 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 1300 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமத்தை 165 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1320 ரூபாயும் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ரூபாய்   7,200 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1320 குறைந்து ரூபாய்  57,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments