3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வியாழன், 19 செப்டம்பர் 2024 (09:57 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சரிந்து உள்ளது தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியையும் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய்   6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து  ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,280 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments