Daily Horoscope

மீண்டும் படிப்படியாக உயரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (11:03 IST)
தங்கத்திற்கான வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,460 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 51,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,915 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments