Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்கள் சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்றைய விலை என்ன?

Written By Siva
Updated: புதன், 31 ஜூலை 2024 (10:44 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கலந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலை கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளதாக தகவல் வேலையாகி உள்ளன.
 
 தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 35 ரூபாயும் ஒரு சவரன் 280 ரூபாயும் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,420 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 உயர்ந்து ரூபாய் 51,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,875 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

எம்.எல்.ஏக்களுக்கு அரசு வாகனம், எரிபொருள் மற்றும் ஓட்டுநர் படி.. தமிழ்நாடு அரசு திட்டம்...

11 வகை மதுபானங்கள் மீது தடை விதித்தது யார்? தடையை அடுத்த நாளே நீக்கியது யார்? ரெண்டுமே மத்திய அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments