Daily Horoscope
✕

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் இவ்வளவா? சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 16 ஜூலை 2024 (10:39 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் ஒரு கிராமிற்கு 45 ரூபாயும் ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,830 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 54,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,300 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  99,500.00
 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments