Daily Horoscope
✕

2 நாள் ஏற்றத்திற்கு மீண்டும் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம் இதோ..!

Written By Mahendran
Updated: சனி, 13 ஜூலை 2024 (10:08 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரிய அளவில் ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய்   6,805 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 54,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,275 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

சொந்த வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் கவனிக்க். போக்குவரத்து மாற்றம்...

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க முடியாதா? மத்தாப்பும் கொளுத்த முடியாதா? பொதுமக்கள் அதிருப்தி...

அன்பில் மகேஷ்க்கு சிறையில் தான் தீபாவளி.. நவம்பர் 18 வரை காவல் நீட்டிப்பு..

கோவை பெரியார் அறிவுலக ஊழல்.. போலி புத்தகங்களை போட்டு எரிச்சிடுங்க!.. கமல் கோபம்...

பெரியார் பேர வச்சி ஊழல்!.. திமுக இனி தலை நிமிராது - விஜய் அட்டாக்...

அடுத்த கட்டுரையில்
Show comments