Daily Horoscope
✕

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வெள்ளி, 14 ஜூன் 2024 (11:46 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,650 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 53,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,120 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 95.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,000.00எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva
 
 
 

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments