Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 குறைவு..!

Written By Siva
Updated: செவ்வாய், 14 மே 2024 (11:20 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் சென்னையில் ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 6,690 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து ரூபாய் 53,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 90.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...

விஜய் இருக்கும்வரை உங்க தலைவர் வரமாட்டார்!.. சட்டசபையில் காரசார வாக்குவாதம்!..

சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?

இளைஞரை அறைந்த எஸ்.ஐ!.. திருப்பி அறைந்த இளைஞர்!.. விசிக போராட்டத்தில் பரபரப்பு!. (வீடியோ)..

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments