Daily Horoscope
✕

அட்சய திருதியை முடிந்தவுடன் தொடர் சரிவில் தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

Written By Siva
Updated: திங்கள், 13 மே 2024 (10:33 IST)
சமீபத்தில் அட்சய திருதியை தினத்தில் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை ஏறிய நிலையில் அட்சய திருதியை முடிந்தவுடன் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 53,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,195 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments