Daily Horoscope
✕

அட்சய திருதியை முடிந்தவுடன் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: சனி, 11 மே 2024 (11:42 IST)
நேற்று அட்சய திருதியை தினத்தில் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை ஏறிய நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று அட்சய திருதியை தினத்தில் காலை, மதியம், மாலை என மூன்று முறை தங்கம் விலை மாறி மாறி ஏறிக் கொண்டிருந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 6,750 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 54,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,220 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 90.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

எல்லாம் காட்டு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கரண்ட் கட்டுக்கு எல்.நினோதான் காரணம்!.. அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?

தமிழகப் பள்ளிகளில் தினமும் உடற்கல்வி வகுப்புகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

ரூ.2000 மேலான UPI பரிவர்த்தனை கட்டணம் ஒத்தி வைப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments