தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5825.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 46600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6295.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50360.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran