இஸ்ரேல் போர் எதிரொலி.. சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
இஸ்ரேல் நாட்டில் கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் தங்கம் கச்சா எண்ணெய் உள்பட ஒரு சில பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்பதையும் பங்குச்சந்தை வீழ்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5380.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 43040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5850.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46800.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva