ஏற்ற இறக்கத்துடன் தங்கம், வெள்ளி.. சென்னையில் இன்றைய நிலை என்ன?

செவ்வாய், 13 ஜூன் 2023 (10:14 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சற்றே உயர்ந்தது என்பதை பார்த்தோம். அந்த வகையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தங்கம் விலை ஒரு கிராம் நேற்று 5580.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 5590.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.44640.00என விற்பனையான நிலையில் இன்று ரூ.80 உயர்ந்து ரூ. 44720.00என விற்பனையாகி வருகிறது. 
 
தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. மேலும் 5500 க்கு மேல் தொடர்ந்து சில நாட்களாக விற்பனையாகி வருகிறது.
 
சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 6058.00 என்றும் ஒரு சவரன் 48464.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து 79.20 என்றும் ஒரு கிலோ 79200.00 என்று விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments