வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை வர்த்தகம் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், இன்றைய சென்செக்ஸ் மற்றும் நிப்டி நிலவரங்கள் குறித்து பார்ப்போம்.
பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 744 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 217 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்கு சந்தையில், கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டைட்டான், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, ஆசியன் பெயிண்ட் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, டெக் மகேந்திரா, சன் பார்மா, ஐடிசி, சிப்லா, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ள பங்குகள் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாரத்தின் முதல் நாளே நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதே போல் இந்த வாரம் முழுவதும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva