வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (12:09 IST)

1000 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் தலையில் இடி..!

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பங்குச்சந்தை சரிவில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் வரை குறைந்ததால், முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தலையில் இடி விழுந்தது போல் இருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் இருந்தது. சற்று முன் சென்செக்ஸ் 1052 புள்ளிகள் சரிந்து, 73,560 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை (நிப்ட்டி) 318 புள்ளிகள் சரிந்து, 22,226 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே குறைந்த அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், கிட்டத்தட்ட மற்ற அனைத்து பங்குகளும் மிகப்பெரிய அளவில் சரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிப்லா, டாக்டர் ரெட்டி, ICICI வங்கி ஆகியவை மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதலீடு செய்தவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva