புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:26 IST)

சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் உயர்ந்தது!

இன்று மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் உயர்ந்து 57,881 புள்ளிகளாக உள்ளது. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து 56,747 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் இன்று மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் உயர்ந்து 57,881 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 335 புள்ளிகள் அதிகரித்து 17,247 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.