Daily Horoscope
✕

சரிவில் முடிந்த சென்செக்ஸ்!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (16:45 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்றும் நேற்றை போல சற்று சரிந்துள்ளது. 
 
நேற்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமானது. 
 
பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் மாலைக்குள் மீண்டும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். 
 
ஆனால் இன்று தொடக்கத்திலிருந்தே சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண்கள் வர்த்தகம் முடிவில் தலா 1% வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 652 புள்ளிகள் சரிந்து 59,646 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 198 புள்ளிகள் குறைந்து, 17,758 புள்ளிகளில் வணிகமாகி நிறைவடைந்தது.

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments