புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (10:25 IST)

சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து 54,041 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

 
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஏராளமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உள்ள அனைத்து பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து 54,041 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதே போல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 16,203-க்கு வர்த்தமாகிறது.
 
மேலும், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.