வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (08:01 IST)

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

 
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அதாவது 68 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருப்பினும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டி உள்ளது என்றும் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி உள்ளது என்றும் அதனால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு மேலாக உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.