வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2024 (09:33 IST)

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சில நிமிடங்களுக்கு முன்பு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 81,019 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 25034 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில், HCL டெக்னாலஜி, HDFC வங்கி, இந்துஸ்தான் லீவர், ICICI வங்கி, இன்போசிஸ், ITC ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன; அதேசமயம், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இஸ்ரேல் மற்றும் ஈராக் போர் காரணமாக பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், தற்போது படிப்படியாக உயர்ந்து, முதலீட்டாளர்களின் பணத்தை காப்பாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva