1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:00 IST)

நேற்று போலவே இன்றும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

நேற்றைய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், இன்றும் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 352 புள்ளிகள் குறைந்து 80,658 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 100 புள்ளிகள் சரிந்து 24,050 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், இன்றைய பங்குச்சந்தையின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்ததாகவும், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.



Edited by Siva