Daily Horoscope
✕

உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

Written By Siva
Updated: வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (10:14 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும் வரும் நாட்களில் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தங்கத்தில் சேமிக்க இது சரியான தருணம் என்றும் முதலீட்டு ஆலோசர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ. 7,930 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய்   63,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,650 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

15 - 20 சதவீதம் வரை உயரும்!.. ஜியோ IPO மீது வல்லுனர்கள் நம்பிக்கை..

இந்தியாவின் அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை...

சிஜேபி போராட்டம்.. இளைஞர்களுக்கு கபில்தேவ் முக்கிய அறிவுரை...

போட்டியை வரவேற்கிறோம்!.. எலன் மஸ்க் புகாருக்கு மவுனம் கலைத்த ரிலையன்ஸ்!..

சிஜேபி போராட்டத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது.. மோடி, அமித்ஷாவுக்கு டெல்லி வியாபாரிகள் கடிதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments