Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 3 மார்ச் 2025 (12:01 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் 7940 ரூபாய் என்ற விலையில் விற்பனையான நிலையில் அதே விலை தான் நேற்றும் இன்றும் விற்பனையாகி வருகிறது என்றும் விலையில் மாற்றமில்லை என்றும் சென்னை நகையாவாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   7,940 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம்    ரூபாய்  63,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,662 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,296 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் பங்கு கொடுக்கும் எலான் மஸ்க்.. எவ்வளவு தெரியுமா?

மேற்கு தொடர்ச்சி மலையை ரசிக்க ஒரு வாய்ப்பு!.. விஸ்டாடோம் கோச் அறிமுகம்!...

ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் போராட்டம்.. அனுமதி மறுத்த காவல்துறை.. தடை மீறப்படுமா?

அக்.24ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்!.. சீமான் அறிவிப்பு...

வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும்!.. வானிலை மையம் தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments