Daily Horoscope
✕

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

Written By Siva
Updated: வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (10:39 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் கிட்டத்தட்ட 1500 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிராம் 185 ரூபாய் இதை நியூஸ் ரிப்போர்ட் ஃபார்மாட்என்பது பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
இன்னும் 40 ரூபாய் தங்கம் விலை உயர்ந்தால் ஒரு சவரன் 70 ஆயிரம் என்று ஆகிவிடும் என்ற நிலையில் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று நகைக்கடை வியாபாரிகள் வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் 150 ரூபாயும் ஒரு சவரன் 1200 ரூபாயும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒரு சவரன் 66480 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு சவரன் 68,480விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,745 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1480 உயர்ந்து  ரூபாய்  69,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,540 எனவும் ஒரு சவரன் ரூபாய் 76,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை இனி எடிட் செய்யலாம்... வியூஸ், லைக்ஸ் மற்றும் ரிப்ளைகளில் பாதிப்பு இருக்காது...

தங்கம் விலை வரலாறு காணாத சரிவு.. 10 நாளில் 12000 ரூபாய் குறைவு..

ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு...

குழந்தை இல்லையா? இனி லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டாம்... தமிழக அரசின் இயற்கை கருத்தரிப்பு மையங்கள்...

முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்துடன் இணைப்பு.. இனி மக்களுக்கு டபுள் ஜாக்பாட்...

அடுத்த கட்டுரையில்
Show comments