Daily Horoscope
✕

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Written By Siva
Updated: வியாழன், 10 ஏப்ரல் 2025 (10:39 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் 150 ரூபாயும் ஒரு சவரன் 1200 ரூபாயும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒரு சவரன் 66480 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு சவரன் 68,480விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் இப்போது தங்கம் வாங்குவது சரியான நேரமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
 
தங்கம் போலவே, வெள்ளியும் உயர்ந்து, ஒரு கிலோவுக்கு ரூ. 3000 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,560 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1200 உயர்ந்து  ரூபாய்  68,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,338 எனவும் ஒரு சவரன் ரூபாய் 74,704 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments