Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வியாழன், 6 மார்ச் 2025 (11:02 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 45 ரூபாயும் ஒரு சவரன் 360 ரூபாயும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து  ரூபாய்   8,020 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 360 குறைந்து  ரூபாய்  64,160 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,749 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,992 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத அனுமதி ரத்து - ஷாக் கொடுத்த மலேசிய அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments