Daily Horoscope
✕

தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

Written By Siva
Updated: திங்கள், 27 ஜனவரி 2025 (10:34 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. நேற்றைய விலையில் இருந்து இன்று தங்கம் ஒரு கிராம் 15 ரூபாயும் ஒரு சவரன் 120 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய்   7,540 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய்  60,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8225 எனவும் ஒரு சவரன் ரூபாய் 65,800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..

நிஷாந்தின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட டிரைவர்!. சிக்கியது எப்படி?...

முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்.. மிதமான மழை மட்டும் தான்...

திட்டம் முடிந்து உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டா இன்கமிங் கால் நிறுத்தப்படும்; ஜியோ அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments