வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (16:20 IST)

உடலுக்கு ஆரோக்கியமான புதினா ரசம் செய்வது எப்படி?

புதினா ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
 
புதினா: 1 கட்டு
புளிக்கரைசல்: ஒரு கப் 
கீறிய பச்சை மிளகாய்: 2
வெந்த துவரம் பருப்பு: அரை கப் 
மிளகு, சீரகம், ரசப்பொடி - தலா 2 ஸ்பூன் 
தனியா: 1 டேபிள் ஸ்பூன் 
துவரம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன் 
நெய்: 1டீஸ்பூன்
கடுகு: அரை டீஸ்பூன் 
உப்பு: தேவைக்கேற்ப
 
புதினா ரசம் செய்வது எப்படி: 
 
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா ஆகியவற்றை சேர்த்து வருது மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். புளிக்கரைசல் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 
 
இதில் வறுத்து பொடித்த பொடி, புதினா ஆகியவற்றை சேர்க்கவும். இரண்டு டம்பளர் தண்ணீர் எடுத்து வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும், பொங்கி, நுரைத்து வரும் பொது, கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு தலித்துக்கொட்டி பரிமாறவும்.