வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (17:23 IST)

என் தொகுதியில ஒரு லட்சம் ஓட்டை காணவில்லை: கமீலா நாசர் பகீர் புகார்

தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர். இவர் கட்சியின் சென்னை மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார்.
 
கமீலா நாசரின் வெற்றிக்காக இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். இந்த தொகுதியில் கமீலா நாசர் வெற்றி பெறுவார் அல்லது இரண்டாவது இடத்திலாவது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு மூன்றாவது இடம் மட்டுமே கிடைத்துள்ளது
 
இந்த நிலையில் தனது பின்னடைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமீலா நாசர், 'எனது தொகுதியான மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் பகுதியில் சுமார் 1.13 லட்சம் வாக்காளர்களின் ஓட்டுகள் திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டுக்கள் இருந்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். இருப்பினும் 13 மாத குழந்தையான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மூன்றாவது இடம் கொடுத்த மக்களுக்கு எனது நன்றி என்று கூறினார்.