வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (09:13 IST)

திமுக கூட்டணி 25… அதிமுக கூட்டணி 2 – தமிழகத் தேர்தல் களம்

தமிழகத்தில் திமுக கூட்டணி 25 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது 8.30 நிலவரப்படி பாஜக பெருவாரியான தொகுதிகளில் காங்கிரஸை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் தமிழக சூழல் அதற்கு நேர்மாறாக உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கொங்குப் பகுதியான கோவை மற்றும் திருப்பூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகிறார்கள்.

அதேப்போல இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர்.