செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: கன்னியாகுமரி , வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:37 IST)

திறந்த வாகனத்தில் தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உடன் உதயநிதி ஸ்டாலின் திறந்த வாகனத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான 'கை' சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 
 
நடக்க இருக்கும் தேர்தலில் விஜய் வசந்த் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்ப்பாளரை விட கூடுதலாக 3-லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூடி நின்ற மக்களை பார்த்துக் கேட்டுக் கொண்டார்.
 
ஒன்றிய அரசு நம்மிடம் வாங்கும் வரி பணத்தில். 0.29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு தருகிறது என்ற பதாகையை உயர்த்தி பிடித்து பிரதமர் மோடி தமிழகத்தை வஞ்சிக்கிறார் என சொன்ன அமைச்சர்  உதயநிதி மேலும் ஒரு புகைப்படத்தை மக்களுக்கு காட்டினார். 
 
அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவழுந்து செல்லும் படத்தை காட்டி. மக்கள் மத்தியில் விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.