நாட்டாமை மனைவி தேர்தலில் போட்டி.. எந்த தொகுதி தெரியுமா..?
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் நடிகர் சரத்குமார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜகவில் தனது கட்சியை இணைத்து குறித்து சரத்குமார் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதியில் பாலகணபதி, வட சென்னை தொகுதியில் பால் கனகராஜ், திருவண்ணாமலை தொகுதியில் அஸ்வத்தாமன், நாமக்கல் தொகுதியில் கேபி ராமலிங்கம், திருப்பூர் தொகுதியில் ஏ.பி முருகானந்தம், பொள்ளாச்சி தொகுதியில் வசந்த ராஜன், கரூர் தொகுதியில் செந்தில் நாதன் சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, நாகை (தனி) தொகுதியில் ரமேஷ், தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம், சிவகங்கை தொகுதியில் தேவநாதன், மதுரை தொகுதியில் ராம சீனிவாசன், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) தொகுதியில் ஜான் பாண்டியன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.