வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (17:00 IST)

மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் பாஜக வெற்றி பெறும்..! பிரதமர் மோடி உறுதி..!!

modi
வருகின்ற மக்களவை தேர்தலில் பாஜக மட்டும் 370 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்றார். ஜபுவா மாவட்டத்தில் 7,550 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜக மட்டும் தனித்து 370 இடங்களை கைப்பற்றும் என்றார்.  முந்தைய தேர்தல்களை விட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும் தனக்கும் தனது கட்சிக்கும் பழங்குடி சமூகம் என்பது வாக்கு வங்கி அல்ல, அது நாட்டின் பெருமை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
 
bjp crowd
குறிப்பாக பழங்குடியின சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட 6 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு சென்றுள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

 
மத்திய பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்ய வந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.