வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (20:16 IST)

நீங்கள் ஓட்டு போடுவதை மோடி கேமராவில் பார்ப்பார் - பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

வரும் மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுகிறீர்களா என்பதை வாக்குச்சாவடியில் உள்ள கேமரா மூலம் மோடி கண்காணிப்பார் என்று குஜராத் குஜராத் எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா பேசியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாரத பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதி உள்ளது. வரும் 23 ஆம் தேதி இத்தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.ஒருவர் இவ்விதம் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் பாமக கட்சியின் வேட்பாளரான  அன்புமணி வாக்குச்சாவடியில் நாம் தான் இருப்போம் என்று பேசியிருந்தது பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தது எனபது குறிப்பிடத்தக்கது.