1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (18:54 IST)

இதுக்கு பேரு தான் மாற்றமோ? ’சின்னய்யாவின் ’ மாற்றத்தைக் கண்ட தமிழகம்!

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார். வக்குச்சாவடியில் நம்ம தான் இருப்போம். அப்புறம் என்ன புரியுதா ? என்று தொண்டர்களைப் பார்த்து அன்புமணி ராமதாஸ் மேடையில் இருந்தபடி பேசியுள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருக்கும் போது என்ன நடக்கும் என அன்புமணி பேசியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
 
வாக்குச்சாவடியை கைப்பற்றத் தூண்டும் வகையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையின் போது பேசியுள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
 
அன்புமணி பரப்புரையின் போது பேசியதாவது:
 
திருபோரூரில் அதிமுக மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதா வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது தேர்தலின் போது வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருக்கும் போது என்ன நடக்கும்? என்று பேசினார்.
 
இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாற்றம் முன்னேற்றம் என்று அன்று பேசிய அன்புமணிராமதாஸ் இன்று ஆளும் அரசுடன் பாமக கூட்டணி உறவு வைத்துள்ளது என்பதற்காக பொதுமேடையில் அநாகரிமாக வன்முறையைத் தூண்டும்  முறையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
 
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நடைபெற   இருக்கிற மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளது. இந்நேரத்தில் தவளை வாயால் மாட்டிக் கொண்ட மாதிரி அன்புமணி ராமதாஸ் சர்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
 
இதற்கு திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்பதை ஒட்டுமொத்த மக்களும் கவனித்துக்கொண்டுள்ளார்கள்.