வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (11:53 IST)

வறுமையால் விபச்சாரி ஆன ராஷ்மிகா மந்தனா: தீயாய் பரவும் "புஷ்பா" போஸ்டர்!

தெலுங்கு சினிமா ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கம் இப்படத்தில் அல்லு அர்ஜூன் கதநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.  
 
இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  
 
படத்தில் வில்லனாக ர் ஃபகத் பாசில் நடிக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் ராஷ்மிகாவின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் சமையல் செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவசரமாக தன் உடைகளை மாற்றி கண்ணாடியைப் பார்த்து காதணி மாட்டுகிறார். இதில் ராஷ்மிகா மிகவும் ஏழ்மையான மற்றும் கவலையுடன் தோற்றமளிக்கிறார். 
 
விருப்பமில்லாமல் ஏதோ ஒரு காரணத்துக்காக( பணத்துக்காக கூட இருக்கலாம்) விபசாரம் செய்வது போல் இந்த போஸ்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வள்ளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஷ்மிகாவின் இந்த தோற்றம் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.