1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. செலிபிரட்டி பயோடேட்டா
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (11:07 IST)

வயசு 51 தோற்றம் 18: ஹேப்பி பர்த்டே குஷ்ஷ்ஷ்..!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிகர் பிரபுவுடன் காதல் வயப்பட்டு பின்னர் சிவாஜி கணேசன் எதிர்ப்பால் பிரிந்துவிட்டார். 
 
அதன் பின்னர் 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார்.

கொழுக் மொழுக் என புசுபுசுன்னு இருந்த குஷ்பு சமீப நாட்களாக உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார். அவரின் ஸ்லிம் பிட் லுக் அடிஅக்டி ஆச்சர்ய படுத்தி வந்த நிலையில் இன்று 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.