இன்னொரு கம்பெனி ஆரம்பித்த சிவ நடிகர்
பினாமி பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சிவ நடிகர், தற்போது இன்னொரு கம்பெனியையும் தொடங்கியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவ நடிகர். சில படங்களிலேயே டாப்புக்குச் சென்ற அவரின் மார்க்கெட்டும் டாப்பில் இருக்கிறது. வித்தைக்காரரான அவர், தன்னுடைய மார்க்கெட் நிலவரத்தைத் தெரிந்துகொண்டு பினாமி பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் மட்டுமே நடித்து வருகிறார்.
அது நல்ல லாபம் தர, சினிமாவின் மற்ற தொழில்களிலும் களமிறங்க முடிவுசெய்து, இன்னொரு கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார். படத்திற்கான புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை இந்த நிறுவனம் செய்துதரும். தமிழ் மட்டுமின்றி, எல்லா மொழிகளிலும் இந்த நிறுவனம் செயல்படும். சிவ நடிகருக்கு மட்டும் எல்லா பக்கமும் அதிர்ஷ்ட காற்று அடிப்பது எப்படி என்று யோசித்து வருகின்றனர் சக ஹீரோக்கள்.