செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By CM
Last Updated : திங்கள், 2 ஏப்ரல் 2018 (20:00 IST)

மலையாள நடிகரின் கட்டுப்பாட்டில் டீச்சர் நடிகை?

தமிழில் காலடி வைத்திருக்கும் டீச்சர் நடிகை, மலையாள நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

 
ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் டீச்சர் நடிகை. இத்தனைக்கும் மலையாளத்தில் தான் அந்தப் படம் ரிலீஸானது. அதைப் பார்த்தே தமிழ்நாட்டு இளைஞர்கள் கிறுக்குப் பிடித்து அலைந்தார்கள். மலையாளத்தில் இருந்து தெலுங்குக்குப் போன நடிகை, நீண்ட யோசனைக்குப் பிறகே தமிழில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
 
தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், யாரிடமும் ஒட்டாமல் அடக்கியே வாசிக்கிறாராம். காரணம், நடிகை மலையாள நடிகை ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம். அவர் சொல்படிதான் நடிகை நடந்து கொள்கிறார், அவர் ஓகே சொல்லும் படங்களில்தான் நடிகை நடிக்கிறார் என்கிறார்கள்.