செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (19:24 IST)

டேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்

பேஸ்புக் தனது பயனர்களுக்கு டேக் எ பிரேக் என்ற புதிய அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளது.

 
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இருந்தாலும் தற்போது பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. 
 
பேஸ்புக்கில் நமது நண்பர்கள் லிஸ்டில் இருப்பவர்கள் அல்லது யாரேனும் நமக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் அவர்களை பிளாக் செய்து விடலாம். ஒருமுறை பிளாக் செய்தால் போது நமது பேஸ்புக் விவரம் மற்றும் பதிவுகளை அவர்களால் பார்க்க முடியாது.
 
சமீபத்தில் பக் ஒன்று இந்த பிளாக் வசதியை காலி செய்தது. இதனால் பயனர்கள் பிளாக் செய்தும் புண்ணியம் இல்லாமல் போச்சே என்று புலம்பி வந்தனர். இந்நிலையில் தற்போது பேஸ்புக் டேக் எ பிரேக் என்ற புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.
 
இதற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள் வட்டாரத்தில் யாருடனாவது நீங்கள் சிறிது காலம் விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களை பிளாக் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.
 
டேக் எ பிரேக் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பிட்ட நபரின் பதிவுகளில் நீங்கள் டேக் செய்யப்பட்டு இருந்தால் தானாகவே அன் டேக் ஆகிவிடும்.