திங்கள், 20 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified திங்கள், 6 டிசம்பர் 2021 (16:33 IST)

ஜியோ போன் சலுகை கட்டணங்களின் விலையும் உயர்வு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் சலுகை கட்டணங்களின் விலையையும் அதிகரித்துள்ளது.  

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் அதனை தொடர்ந்து வோடோபோன் நிறுவனம் உயர்த்தியது என்பதையும் பார்த்தோம். தற்போது ஜியோ நிறுவனமும் ப்ரிபெய்டு கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பதும் இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 
 
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் சலுகை கட்டணங்களையும் மாற்றியமைத்திருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஜியோபோன் ரூ. 155 சலுகையின் விலை தற்போது ரூ. 186 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. 
 
ரூ. 186 விலையில் வழங்கப்பட்டு வந்த ஜியோபோன் சலுகை ரூ. 222 விலைக்கு வழங்கப்படுகிறது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
 
ஜியோபோன் ரூ. 749 சலுகையின் விலை தற்போது ரூ. 899 என மாறி இருக்கிறது. இதில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டாவும், 336 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.