புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (19:01 IST)

தவறவிடக்கூடாத ஆஃப்பர் - ரியல்மி எக்ஸ் புதிய மாடல் அதிரடி விலையில்!

ஸ்மார்ட்போன் உலகில் பிரபலமான ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

முந்தைய மாடல்களை விட மேம்பட்ட ரியல்மி எக்ஸ் 6.53 இன்ச் AMOLED Display ஐ கொண்டது. ஸ்னாப்டிராகன் 710 அதிவேக பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் எடுக்க பின்பக்கம் 48 எம்.பி மற்றும் 5 எம்.பிக்களில் இரண்டு கேம்ராக்களும், அதிநவீன லை சென்சார்களும் உள்ளன. செல்பி எடுக்க முன்பக்கம் 16 எம்.பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டிஸ்பிலேவில் கையை வைத்தே மொபைலை அன்லாக் செய்யும் டிஸ்ப்ளே அன்லாக் முறையும் உள்ளது.

ரியல்மி எக்ஸ் மாடல் ஸ்பேஸ் ப்ளூ மற்றும் போலார் ஒயிட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி ரேம் கொண்ட மாடல் 16,999 ரூபாயும், 8 ஜி.பி ரேம் கொண்ட மாடல் 19,999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலுக்கான விற்பனை ஜூலை 24 அன்று ப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்திலும், ரியல்மி வலைதளத்திலும் நடைபெறும். அதற்கு முன்னால் ஜூலை 18ம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு விற்பனை ரியல்மி வலைதளத்தில் நடைபெறும் என ரியல்மி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.