செவ்வாய், 16 ஏப்ரல் 2024
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:52 IST)

அடக்கமான பட்ஜெட் விலையில் அட்டகாசமான Moto G24 Power! – சிறப்பம்சங்கள் என்னென்ன?

Moto G24 Power
பிரபலமான லொனோவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டோவின் புதிய மாடலான Moto G24 Power -ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


 
90களில் செல்போன் பயனாளர்களிடையே பிரபலமாக இருந்த நிறுவனங்களில் ஒன்று மோட்டோரோலா. 2014ல் இந்த நிறுவனத்தை லெனோவோ நிறுவனம் வாங்கிய நிலையில் அதன்பின்னர் மோட்டோ ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு உள்ள நிலையில் மோட்டோ நிறுவனம் தனது புதிய Moto G24 Power 4G ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுகிறது.

Moto G24 Power 4G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
 • 6.56 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
 • மீடியாடெக் ஹெலியோ G85 சிப்செட்
 • மாலி G52 MP2 GPU
 • ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டட் ஓஎஸ்
 • 4 ஜிபி / 8 ஜிபி RAM (2ஜிபி/4ஜிபி ரேம் பூஸ்ட்)
 • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
 • 50 MP + 2 MP ப்ரைமரி டூவல் கேமரா
 • 16 MP முன்பக்க செல்ஃபி கேமரா
 • ஹெட்ஃபோன் ஜாக், FM Radio வசதி உள்ளது
 • 6000 mAh பேட்டரி, 30 W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
 
இந்த Moto G24 Power 4G ஸ்மார்ட்போன் க்ளாசியர் ப்ளூ மற்றும் இங்க் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.8,999 என்றும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.9,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Moto G24 Power 4G ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7ம் தேதி முதல் மோட்டோ வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

Edit by Prasanth.K