புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (11:04 IST)

iPhone 14 Series... விலை, விற்பனை, முன்பதிவு எப்போது??

புதிய ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்த தகவல்.


உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள செல்போன் நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஆப்பிள். இதன் ஐபோன் மாடல்கள் ஒவ்வொருமுறை அறிமுகம் ஆகும்போதும் பலர் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஐபோன் 14 சீரிஸ் இந்திய முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. இதில் ஐபோன் 14 விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதியும், ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.
ஐபோன் 14 சீரிஸ் விலை விவரம்:  
ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 79,900
ஐபோன் 14 (256 ஜிபி) விலை ரூ. 89,900
ஐபோன் 14 (512 ஜிபி) விலை  ரூ. 1,09,900
ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) விலை  ரூ. 89,900
ஐபோன் 14 பிளஸ் (256 ஜிபி) விலை ரூ. 89,900
ஐபோன் 14 பிளஸ் (512 ஜிபி) விலை  ரூ. 1,19,900