வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (08:27 IST)

மார்க் ஸூகர்பெர்க் பதவி பறிபோகுமா? – ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த நிறுவனத்தில் முத்லீடு செய்துள்ளவர்கள் மார்க் ஸூகர் பெர்க்கைப் பதவி விலகக் கோரி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால் அதிரிச்சையடைந்த மார்க், செய்தியாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் ’குறிப்பிட்ட நிறுவனம் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது. நியூயார்க் டைம்ஸ் செய்தியைப் படித்தபின் எனது நிறுவன அதிகாரிகளோடு இது குறித்து விவாத்தித்து அந்த நிறுவனத்தோடு உள்ள எல்லா தொடர்புகளையும் முறித்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.’ என விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு தகவல்களை விற்றதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பேஸ்புக் நிறூவனம் மெல்ல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.