ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (16:10 IST)

பொறுத்தது போதுமென பொங்கியெழுந்த பேஸ்புக் -டிக் டாக் vs லஸ்ஸோ !

சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக் செயலிக்குப் போட்டியாக தங்களது புதிய செயலியான லஸ்ஸோவை களமிறக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

எதிர்காலத்தில் அனைவரும் குறைந்தபட்சம் ஏழு நிமிடங்களாவது  புகழடைவார்கள் என எழுத்தாளர் சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அது கிட்டத்தட்ட நடந்துகொண்டு வருகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது பிடித்த பாடல்களுக்கோ அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கோ குரல் கொடுத்தும், நடனக் காட்சிகளுக்கு நடனமாடியும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கனெவே பிரத்யேகமாக உள்ள செயலிகளான மியூசிக்கலி மற்றும் டிக் டாக் போன்றவை இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.

இந்த டிக் டாக் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வீடியோக்களில் சிலர் அத்துமீறி ஆபாசமாக பேசியும் நடனங்கள் ஆடியும் வருவதால் இவற்றின் மீது எதிர்மறை விமர்சனங்களும் வந்துகொண்டுதான் உள்ளன என்றாலும் நாளுக்கு நாள் இதன் பயனாளர்கள் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டேதான் இருக்கிறதே ஒழிய குறைந்த பாடில்லை.

இந்த டிக் டாக்கின் அசுர வளர்ச்சியைப் பார்த்த பேஸ்புக் நிறுவனம் இப்போது தங்கள் பங்குக்கு ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. லஸ்ஸோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியும்  வீடியோ எடிட்டிங் மற்றும் பில்டர் வசதிகள் என டிக்டாக்கின் அனைத்தும் வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த செயலியை விரைவில் இந்தியாவுக்கும் கொண்டு வர பேஸ்புக் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.